கோயில் நகைகளை உருக்கும்போது சிறு தவறு கூட ஏற்படாது: உத்தரவாதம் கொடுக்கும் அமைச்சர்!

கோயில் நகைகளை உருக்குவதில் இம்மியளவு கூட தவறு ஏற்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-03 11:07 GMT

கோயில் நகைகளை உருக்குவதில் இம்மியளவு கூட தவறு ஏற்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, தங்கசாலையில் உள்ள வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகள் அனைத்தும் அப்படியே தேங்கியுள்ளது.

அதில் எவ்வித பயன்பாடு இல்லாத நகைகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கு பயன்படும் நகைகளை கணக்கிட்டு பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். மேலும் தெய்வ வழிபாட்டிற்கு தேவைப்படாத நகைகள், உடைந்துபோனவை, சிறு சிறு நகைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கிறோம்.

எனவே தங்கக்கட்டிகளை தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கும் வட்டியை மீண்டும் கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் இம்மியளவு தவறு கூட நேராது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News