அ.தி.மு.க. தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நியமனம் செல்லும்!- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதே போன்று துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இது தவிர்த்து வழிகாட்டு குழுவில் 11 பேர் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் கூறினர்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இனிமேல் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் குறித்த பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்று அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது.
இது போன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை எடுத்து கொண்ட நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நியமனம் பற்றிய தேர்தல் ஆணைய உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் இது போன்ற உட்கட்சி வழக்கை சிவில் நீதிமன்றத்தில்தான் தொடர முடியம் எனவும் கூறியது. இந்த உத்தரவை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi