ஓம் சக்தி! பராசக்தி! - பங்காரு அடிகளாரிடம் பவ்யம் காட்டிய உதயநிதி!
ஓம் சக்தி! பராசக்தி! - பங்காரு அடிகளாரிடம் பவ்யம் காட்டிய உதயநிதி!
தி.மு.க இந்துக்களின் எதிரி என்ற பிம்பத்தை உடைக்க தலைகீழ் நின்று தண்ணீர் குடித்து வருகிறது. முன்பெல்லாம் பெரியாரை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வர் தி.மு.க'வினர், ஆனால் இப்பொழுதெல்லாம் பிரச்சார திட்டங்களில் சினிமாவில் கூறுவது போல் "செட் ப்ராப்பர்ட்டி" மாதிரி 'முருகப்பெருமானின் வேல்' இல்லாமல் பிரச்சாரத்தை துவங்குவதில்லை தி.மு.க'வினர். பேனர் ரெடியா? கூட்டத்திற்கு ஆள் ரெடியா? மேடை ரெடியா? என வரிசையாக கேட்டுவிட்டு கடைசியாக "யப்பா அந்த வேல் ரெடியா?" என கேட்கும் அளவிற்கு இந்துக்கள் வாக்கு வங்கி தி.மு.க'வை மாற்றியுள்ளது.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காரு அடிகளார் அவர்களை தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் பவ்யமாக சந்தித்து மரியாதையாக வணங்கியுள்ளார். வணங்கியது மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பதிவில், "காஞ்சிபுரம்(தெ)மாவட்ட @StalininKural பிரச்சார பயணத்துக்கிடையே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி-மருத்துவம்-பண்பாட்டு அறநிலைய தலைவர் பங்காரு அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தலைவர்@mkstalin அவர்கள் உட்பட குடும்பத்தாரை விசாரித்த அடிகளார் அவர்களுக்கு நன்றி" என பெருமையாக பதிவிட்டுள்ளார்.
இதே பழைய தி.மு.க'வாக இருந்திருந்தால் எந்த ஊருக்கு தி.மு.க தலைவர்கள் சென்றாலும் அந்த ஊரின் மைய பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பெரிய ரோஜாப்பூ மாலையை வாங்கி போட்டுவிட்டு சிரித்தபடியே வலம் வருவர். ஆனால் இப்பொழுதெல்லாம் தி.மு.க'வினரின் சுற்றுபயணத்தில் ஆதினம், சைவ மடம், பங்காரு அடிகளார் போன்றவர்களை சுற்றியே வருகிறது. அப்படியே போகும் வழியில் ஈ.வே.ரா சிலை இருந்தாலும் தலையை திருப்பி கொள்வார்கள் போலிருக்கிறது. எல்லாமே தேர்தலை தி.மு.க சந்திக்கும் வரைதானே!!