நாடாளுமன்றத்தில் 6 பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்து மகிழும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு, வலுக்கும் கண்டனங்கள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 29) கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்ட ரத்து செய்யப்படுவதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடியும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

Update: 2021-11-29 11:40 GMT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 29) கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்ட ரத்து செய்யப்படுவதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடியும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், 6 பெண் எம்.பி.க்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி என்று அதன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே, திமுகவை சேர்ந்த தழிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்டோருடன் சசி தரூருடன் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்தது. இது தொடர்பாக எழுத்தாளர் வித்யா கிருஷ்ணன் கூறுகையில், நாடாளுமன்றத்தில் உள்ள பெண்கள் உங்கள் பணியிடத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் கிடையாது. அவர்கள் எம்.பி. நீங்கள் அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.


இதனால் அலறியடித்துக்கொண்ட சசிதரூர், சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் பணியிடத்தின் தோழமையின் நிகழ்ச்சி மட்டுமே என்று விளக்கத்தை கொடுத்திருந்தார். மேலும் பெண் எம்.பி.க்கள்தான் இந்த புகைப்படத்தை ஷேர் செய்யவும் கேட்டுக்கொண்டனர் அவர்கள் கேட்டுக்கொண்டதால் அதனை ட்விட்டரில் பதிவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்திற்கு பணி செய்வதற்காக செல்லாமல் இப்படி பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்து மகிழ்வதுதான் உங்களின் மக்கள் பணியா என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News