சசிகலாவுடன் பின்தொடர 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.. கட்டுப்பாடு விதித்த போலீசார்.!
சசிகலாவுடன் பின்தொடர 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.. கட்டுப்பாடு விதித்த போலீசார்.!;
அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா அக்கட்சியின் கொடியை காரில் பயன்படுத்தி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிமுக கொடியை சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சசிகலாவுடன் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்நது செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அவர்கள் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துக்கொள்ளலாம். அதுவும் சீருடை அணிந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
மேலும், கொரோனா தொற்று மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு காவல் சட்டம் தற்போது அமலில் உள்ள காரணத்தால் காவலர்கள் விதித்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.