தி.மு.க கொடி கட்டிய காரை பார்த்தாலே பதறும் ஊட்டி வியாபாரிகள் - வசூல் வேட்டையில் நீலகிரி பகுதி தி.மு.க.!

தி.மு.க கொடி கட்டிய காரை பார்த்தாலே பதறும் ஊட்டி வியாபாரிகள் - வசூல் வேட்டையில் நீலகிரி பகுதி தி.மு.க.!

Update: 2020-12-08 06:45 GMT

திராவிட முன்னேற கழகத்தின் கள அளவிலான  நிர்வாகிகளின் ரவுடியிச அட்டூழியம் மற்றும் வியாபாரிகளிடம் வசூல் செய்வது போன்ற செயல்கள் மக்களிடையே வெறுப்பை வரவழைத்துள்ளன. ஊரெல்லாம் நடக்கும் சம்பவங்களுக்கு ஊரை கூட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் என அலறல் விடும் தி.மு.க தலைமையோ தன் கட்சிக்காரர்களின் மக்கள் மீதான அட்டூழியத்தை தட்டி கேட்ட இயலாமல் காதுகளை மூடியுள்ளது பற்றி மக்கள் புலம்பி வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரியில் கட்சி ஆபீசுக்கு வசதிகள் செய்யனும், கட்சிக்கு போராட்ட நிதி வேண்டும் என சாக்கு போக்கு சொல்லி மார்வாடிகளிலிருந்து மளிகைக் கடைவரை வசூல் நடத்தப்படுவதால்  தி.மு.க. கொடி போட்ட கார்களைப் பார்த்தாலே ஊட்டி வியாபாரிகள் தெறித்து ஓடும் நிலை உருவாகியுள்ளது'' என்றும் கூறுகிறார்கள் நீலகிரி பகுதி மக்கள்.

இது குறித்து அறிவாலயத்திற்குப் புகார்கள் பறந்த நிலையில் இந்த புகாரை கண்டும் காணாமல் இருக்கிறதாம் தி.மு.க தலைமை காரணமே தற்பொழுது அரசியல் நேரம் என்பதாலும், கட்சி கூட்டங்கள் மற்றும் அதற்கான செலவீனங்களை நீலகிரி பகுதி உடன்பிறப்புகள் செய்து வருவதால் தற்பொழுது தி.மு.க தலைமை வாயை மூடிக்கொண்டு அவர்களை களமாடவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதனை நீலகிரி பகுதியின் முக்கிய தலைவரான ஆ.ராசா'வோ கண்டும் காணாமல் உள்ளாராம். காரணம் கடந்த தேர்தலில் எம்.பி'யாக அந்த பகுதி உடன்பிறப்புகள் உழைத்து கொடுத்ததன் பலன் என்கின்றனர்  விஷயமறிந்தவர்கள்.

மேலும் இதுபோல் வியாபாரிகளிடம் தி.மு.க வசூல் வேட்டை நடத்துவது குறித்த புகார்களை தேர்தல் நேரத்தில் அந்த பகுதியில் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று தி.மு.க'வின் வண்டவாளங்களை மற்ற கட்சியினர் மூலம் வெளிக்கொண்டு வர சில முக்கிய வியாபாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வறட்சியில் இதுபோல் தி.மு.க'வினர் நடந்து வருகின்றனர் என்றும், இது நீலகிரி பகுதியில் அதிகமாக புகார் எழுந்துள்ளதாகவும், தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் இதர பகுதிகளில் இதுபோன்ற வியாபாரி'களின் அவலநிலை வெளிவரும் என சிலர் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Similar News