தி.மு.க.வுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் கைது செய்யப்படுகிறார்கள்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
திமுக ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக உட்கட்சி தேர்தல் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று தேர்தல் நடைபெற்றது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரான ஜெயக்குமார் மாங்காடு பகுதியில் தேர்தலை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:
பொதுமக்கள் அதிமுகவிர் தொண்டர்களின் எண்ணம் எல்லாமே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதுதான். அதிமுகவின் நிலைப்பாடும் அதேதான். எனவே, தீபா, தீபக் தாமாக முன்வந்து அந்த இல்லத்தை ஒப்படைக்க வேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எங்க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திமுக திறந்து வைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Source: News 7 Tamil
Image Courtesy:The Indian Express