ஆளுநரை இன்று சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி !

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.

Update: 2021-10-20 03:37 GMT

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் அதிமு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணியைத் தொடர்ந்து தற்போது 4வதாக விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 43 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிக சொத்துக்களை சேர்த்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்தது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பானது காலை 11மணிக்கு நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் செல்கின்றனர். தமிழக ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு நடத்தி வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது. திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: toptamilnews

https://www.toptamilnews.com/thamizhagam/edappadi-palanisamy-meets-governor-rn-ravi-today/cid5563144.htm

Tags:    

Similar News