தருமபுரி: பிஎம்.கேர் நிதியில் தொடங்கி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி திட்டம்! தி.மு.க. கொண்டுவந்தது போன்று பதிவிட்ட எம்.பி., செந்தில்குமார்!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி நேற்று (அக்டோபர் 7) உயிர் காக்கும் திட்டத்தை (ஆக்சிஜன் உற்பத்தி) தொடங்கி வைத்தார். இதே போன்று மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-08 01:50 GMT

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி நேற்று (அக்டோபர் 7) உயிர் காக்கும் திட்டத்தை (ஆக்சிஜன் உற்பத்தி) தொடங்கி வைத்தார். இதே போன்று மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கி வைத்தார்.

அதே போன்று தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பல கோடி ரூபாயில் பி.எம்.கேர் நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம், தருமபுரி, கோவை, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் தொகுதியில் உள்ள தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.


இந்நிலையில், தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டம் தயாரிக்கும் ஆக்சிஜன் செறிவூட்டி மையத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சி தருமபுரி மாவடட் தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது திமுக அரசு அமைத்தது போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் மற்றொரு புறம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை அச்சிட்டு திமுக தொடங்கியது போன்று இருந்தது.


அந்த பேனருக்கு கீழே சிறிய எழுத்தில் பிரதமர் கவனிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்திற்கு 1000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம். திறந்து வைப்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி, முன்னிலை எம்.பி. செந்தில்குமார், மற்றும் தருமபுரி தொகுதியின் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பெயர் கடைசியில் மிகவும் சிறியதாக போடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை தங்கள் ஆட்சியில் கொண்டு வந்தது போன்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கேளியாக கமெண்ட்களை செய்து வருகின்றனர். பிரதமர் திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிக்கு திமுக அரசு எப்போதும் லேபிள் ஒட்டிக்கொள்வது வழக்கம்தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர். அதே போன்று பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம் நேற்று திறக்கப்பட்டது.


இதனை பென்னாகரம் சட்டமன்ற எம்.எல்.ஏ.,வும், பாமக மாநில தலைவருமான ஜி.கே.மணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் கவனிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம் இன்று (07.10.2021) பென்னாகரம் அரசு மருத்துவமனையில் திறந்து வைத்தபோது என்று பதிவிட்டுள்ளார். திமுக எம்.பி. தங்களின் ஆட்சியில் கொண்டு வந்ததை போன்று பதிவிட்டிருந்த நிலையில், பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் திட்டம் என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: MP Senthil Kumar FB, G.K. MANI MLA FB

Tags:    

Similar News