மத்திய அரசு 7-ஆம் ஆண்டு நிறைவு - பழனியில் பா.ஜ.க ரத்ததான முகாம்!

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 7ம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவ உதவிகள் மற்றும் ரத்ததானம், உணவு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், பழனியில் பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு இணைந்து ரத்ததான முகாம் நடத்தியுள்ளது.

Update: 2021-06-01 06:12 GMT

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு வகையில் உதவிகளை செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவி வரும் சமயத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களால் 2 மாதங்கள் ரத்ததானம் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே இதனை அறிந்த பாஜகவினர் முன்கூட்டியே ரத்ததான முகாம்களை அமைத்து ரத்ததானம் செய்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் உயர்களை காப்பாற்ற முடியும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி பழனியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் செந்தில், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பழனி நகர காவல்துறை ஆய்வாளர் பாலகுரு, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News