80 கோடிக்கு கருணாநிதிக்கு நினைவு சின்னமா? கொதிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்!

Update: 2022-07-26 11:05 GMT

சென்னை, மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 134 அடி உயரத்தில் பேனா நினைவு சிலை அமைப்பதற்கு தி.மு.க., அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபடியும் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைப்பதற்கு தி.மு.க., அரசு முடிவு எடுத்துள்ளது.

மேலும், இந்த பேனாவை பொதுமக்கள் பார்வையிட சுமார் 650 மீட்டர் தூரத்திற்கு இரும்பு பாலம் ஒன்று அமைக்கவும், இப்பாலத்தில் நடந்து செல்லும் பகுதி அனைத்தும் கண்ணாடியால் செய்யப்பட்ட தரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பேனா சிலை வைக்க நிதி இருக்கும் அரசிடம் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லையா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News