'உங்க ஆட்சியில் மக்கள் பாதுகாப்பே இல்லாம இருக்காங்க அறிவாலய அரசே!' - புதுக்கோட்டை பெண் தற்கொலை சம்பவத்தில் அண்ணாமலை காட்டம்

'திறனற்ற தி.மு.க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது' என தன் சாவுக்கு தி.மு.க நிர்வாகிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-10-03 05:45 GMT

'திறனற்ற தி.மு.க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது' என தன் சாவுக்கு தி.மு.க நிர்வாகிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் குமார் என்பவருக்கும் இடையில் நடைபாதை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால், கடந்த, 20-ம் தேதி, கீரமங்கலம் போலீசார், கோகிலா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இதனை அடுத்து, அவர் காவல்நிலையத்தில் தினம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து தன்னை கைது செய்து விட்டதாக மன உளைச்சலில் இருந்த அவர் தன்னை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடித்தத்தில், தி.மு.க'வின் கட்சியின் அராஜகம். கட்சி பவரை குமார் எங்களிடம் காண்பித்து விட்டார். என் சாவுக்கு குமார் மற்றும் அவரது மனைவி புகனேஸ்வரி தான் காரணம். காவல்துறையினர் கையெழுத்து போட செல்லும் போதெல்லாம் என்னை மிரட்டுகின்றனர்.

நடைபாதை தொடர்பான வழக்கில், கணவனையும் இணைத்து விட்டதால், பயந்து போய் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனால், இந்த முடிவை எடுக்கிறேன் என அவர் எழுதியிருந்தார்.

இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், 'புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கோகிலா திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால் பதியப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரைத் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திறனற்ற திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது.

இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது அறிவாலய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.



Source - Annamalai Tweet 

Similar News