பாதுகாப்பு விதிமீறல்: உள்துறை அமைச்சர் கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டதால் அவர்க பைத்தியக்காரத்தனமாக நடப்பது சரியில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கியுள்ளார்.

Update: 2022-01-06 02:28 GMT

காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டதால் அவர்க பைத்தியக்காரத்தனமாக நடப்பது சரியில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி வழங்க இருந்தார். அதற்காக டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா வரை விமானம் மூலம் பயணம் செய்தார். அங்கிருந்து ஹுசைனிவாலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கு அமைந்திருக்கும் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்வது தடைப்பட்டது. இதனால் சாலை வழியாக செல்லலாம் என்று பஞ்சாப் மாநில டிஜிபி கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநில போலீசார் செய்துள்ளதாக கூறியுள்ளார். 


இதனையடுத்த பிரதமர் மோடி கார் மூலமாக விழா நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். பிரதமரின் கான்வாய் வாகனம் ஹுசைனிவாலாவை சென்று கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விவாசய போர்வையில் சாலை மறியலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் பிரதமர் மோடி சென்ற கார் மேம்பாலத்தின் மேல் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் மோடியின் கான்வாய் விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மட்டுமின்றி பிற கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஒரு நாட்டின் பிரதமருக்கு எப்படி பாதுகாப்பில் கோட்டை விடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் தனது அறிக்கை வாயிலாக காண்டனங்களை தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காட்சி காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவர்களின் சிந்தனை எப்படி என்பதற்கு இது ஒரு டிரெய்லர் காட்சி மட்டுமே. மக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்று கடுமையாக தாக்கினார். உடனடியாக காங்கிரஸ் கட்சியினர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy:India.Com

Tags:    

Similar News