கொலைகாரனின் விடுதலையை ஏதோ தியாகியின் விடுதலை போல் கொண்டாடி வருவது தமிழினத்தின் மீது வடு - முதல்வர் ஸ்டாலினை சாடும் SG.சூர்யா
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 18-ஆம் தேதி பேரறிவாளனை கட்டி அணைத்து ஆனந்தத்தை பகிர்ந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 21-ஆம் தேதியான இன்று பேரறிவாளன் கொன்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவரின் உருவ படத்திற்கும் மரியாதை செலுத்தி உள்ளார்.
எந்த கட்சியை தனது தலைவர் ராஜிவ் காந்தியின் கொலைக்கு காரணமென குற்றம் சாட்டினர்களோ,அதை முன்னிட்டு ஒரு அரசினை கவிழ்த்தார்களோ,அதே கட்சியுடன் இதே காங்கிரஸ் கட்சி 2004 முதல் தற்போது வரை கூட்டணியில் இருந்து வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவன், ராஜிவ் காந்தி கொலையை துல்லியமாக அரங்கேற்ற தனது கூட்டாளிகளுடன் வி.பி.சிங் கூட்டத்திற்கு சென்று ஒத்திகை பார்த்த ஒருவன், போலீஸார் உட்பட 18 தமிழர்கள் உயிரிழப்பதற்கு காரணமான ஒருவன் சட்ட நுணுக்கங்களை கொண்டு விடுதலை செய்யப்படுவதும் அதை கொண்டாடுவதும் என தமிழினத்தின் மீது நீங்காத கரை படிந்துள்ளது கடந்த 4 நாட்களின் செயல்கள் வழியே. அதை காங்கிரஸின் கூட்டணி கட்சிகளே அரங்கேற்றுகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவி. சிற்றரசு ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்கை நாராயணன் போன்றோர் தி.மு.க பேரறிவாளனை கொண்டாடுவதை எதிர்த்து கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். இவர்களுக்கு இருக்கும் திராணியும், நேர்மையும், நெஞ்சுரமும் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாதது துரதிஷ்டமே.
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் முதல், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர் என பொதுவெளி மனிதர்கள் பலரும் பேரறிவாளன் எனும் கொலைகாரனின் விடுதலையை ஏதோ தியாகியின் விடுதலை போல் கொண்டாடி வருவது தமிழினத்தின் மீது ஆறாத வடுவை உண்டாக்கியுள்ளது என தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
Input From: https://suryah.in/