பூரண குணம்.. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் சசிகலா.!
பூரண குணம்.. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் சசிகலா.!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவனையில் சசிகலா பெற்று வரும் நிலையில், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைகாலம் கடந்த 27ம் தேதி முடிவடைந்துவிட்டது. இதனிடையே சிறையில் இருந்து விடுதலை பெறும் சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் விக்டோரியா மருத்துவமனையில் மாற்றப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் அங்கேயே சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஆணையை மருத்துவமனையிலே சென்று சிறை அதிகாரிகள் வழங்கினர்.
இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஜ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் பிப்ரவரி 3 அல்லது பிப்ரவரி 5ம் தேதி தமிழகம் வருவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சசிகலாவின் உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.