விநாயகர் சதுர்த்திக்கு தடை ஆனால் 17'ம் தேதி பெரியார் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டம் - கி.வீரமணி அறிவிப்பு !

DK ready to celebrate EV Ramaswamy birthday as grandeur

Update: 2021-09-04 08:45 GMT

விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்துவிட்டு திராவிடர் கழகம் பெரியார் 143 பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10'ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரவுள்ளது. ஆனால் இதனை கொண்டாட தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அனுமதியளிக்கவில்லை. சிலைகள் வைக்கவும் அனுமதியில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கர்நாடகமும், புதுச்சேரியும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அனுமதி அளித்துள்ளது குறிப்பிடதக்கது. இதற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தி.மு.க அரசு கண்டும் காணாமல் உள்ளது.

இதற்கிடையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசும் பொழுது கூறியதாவது, "பெரியாரின் 143'வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி ' திராவிடத் திருவிழாவாக' நடத்த திட்டம். பெரியார் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டு 'திராவிடத் திருவிழா' இணைவழி கருத்தரங்குகளாக நடைபெறும்" என அறிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கட்டுப்பாடுகளுடன் கூட அனுமதி இல்லை ஆனால் பெரியார் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திராவிடர் கழகம் திட்டமிடுகிறது தமிழகத்தில்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News