உத்தர பிரதேச மாநிலம், சரஸ்வதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஜன்தன கணக்குகளை கேலி செய்தனர். ஆனால் தற்போது விவசாயிகளுக்கு அதன் உண்மையான அர்த்தம் புரிந்துள்ளது எனக் கூறினார்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2000 மத்திய அரசு செலுத்துகிறது. வகுப்புவாதம் பேசும் அரசியல் கட்சிகளுக்கு, ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, ஈரானிலோ, ஈராக், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சட்டப்பூர்வ முத்தலாக் கிடையாது.
ஆனால் நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலமாக நமது மதச்சார்பற்ற தேசத்தில் வாழுகின்ற கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy: The World Economics Forum