மொழி அரசியலில் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி கூறிய அரசியல் உண்மைகள்
இந்தியை வைத்து சில அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதற்கு முயற்சி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க. பொறுப்பாளர்களுடன் காணொளி மூலம் உரையாடி பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநில மொழிகளுக்கும் புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார். கடந்த சில நாட்களாக மொழியின் அடிப்படையில் சர்ச்சைகளை உண்டாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். ஒவ்வொரு மாநில மொழியும் நமது நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்றார்.
தமிழகத்தில் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தி மொழியை தமிழக அரசுப்பள்ளிகளில் வராமல் தடுத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் இந்தி படிக்க முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் தனியார் பள்ளிகளில் இந்தி சொல்லிக்கொடுக்கப்படுகிறது. பணம் உள்ளவர்கள் மட்டுமே இந்தி படிக்கும் நிலைக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளனர். எனவே அரசுப்பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ஏழைகளின் விருப்பம் ஆகும்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai