ஹேக் செய்யப்பட்ட பிரதமரின் ட்விட்டர் கணக்கு !

Update: 2021-12-12 05:15 GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அரசின் நிகழ்வுகளையும், கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவேற்றுவதில் ஆர்வம் காட்டுபவர் பிரதமர் மோடி. உலக அளவில் பர தலைவர்கள் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்கின்றனர்.


இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிறுது நேரத்தில் அது கண்டறியப்பட்டு ட்விட்டர் நிர்வாகத்திடம் முறையிடப்பட்டு சரி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் காலை முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News