பா.ம.க. சார்பில் 23ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு.!
பா.ம.க. சார்பில் 23ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனால் அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகள் விருப்பமனு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாமக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு வழங்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 23ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் வரும் 26ம் தேதி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
பொதுத்தொகுதியில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு கட்டணமாக ரூ.10,000, தனித்தொகுதி மற்றும் பெண்களுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாமக நிர்வாகிகள் இப்பவே சென்னையை நோக்கி படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.