முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தூக்கிய போலீஸ்.!
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தூக்கிய போலீஸ்.!;
சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு நம்பரான 100க்கு அழைத்த மர்ம நபர் ஒருவர் சேலத்தில் உள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனையடுத்து, வெடிகுண்டு நிபுரணர்கள் வரவழைக்கப்பட்டு முதலமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் எதுவும் இல்லை என்பதும் அது புரளியானவை எனவும் தெரியவந்தது.
இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபரின் தொலை பேசி எண்ணை வைத்து விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.