பொள்ளாச்சி கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு மக்களுக்கு 39,000 பாக்கி - தி.மு.க எம்.எல்.ஏ'வின் திராவிட மாடல் ஆட்டம்
பொள்ளாச்சி கூட்டத்தில் பொது மக்களுக்கு ₹39,000 பாக்கி தராத தி.மு.க MLA மீது கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்.
கோவையில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக பல்வேறு தரப்புகளில் இருந்து மக்கள் பள்ளி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தார்கள் தி.மு.க நிர்வாகிகள். இது குறிப்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் ஏற்கனவே, பள்ளிக் கல்வித் துறையின் பணி கல்வியை புகட்டுவதா? அல்லது ஆட்களை பிடித்துக் கொண்டு வர வேலைகளை செய்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். தி.மு.கவின் நிகழ்ச்சிக்காக பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்கள் காசுகள் கொடுத்து கூட்டி வரப்பட்டார்கள்.
குறிப்பாக ஏழை மக்கள் தங்களுடைய ஒருநாள் வேலையை தியாகம் செய்து இந்த நிகழ்ச்சிக்காக அழைத்து செல்லப்பட்டார்கள். அந்த வகையில் தற்போது பொள்ளாச்சி கூட்டத்திற்கு பங்கேற்க அந்தப் பகுதியைச் சேர்ந்த மாக்கினாம்பட்டி பொதுமக்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ஒரு நபருக்கு 300 என்று கூறி சுமார் 130 பெயர் தேவைப்படுகிறார்கள் என்று அந்தப் பகுதியை சேர்ந்த தி.மு.க MLA கூறுகிறார். இதன் காரணமாக அவர்கள் தங்களுடைய வேலைக்கு கூட செல்லாமல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பேருந்து அனுப்பி வைப்பதாக கூறி எந்த ஒரு பேருந்தையும் அனுப்பி வைக்காமல் ஒரு நாள் வேலையும் கெடுத்த தி.மு.க MLA அவர்கள் தன் கொடுப்பதாக கூறிய தலா ஒரு நபருக்கு 300 என்ற கணக்குப்படி சுமார் 39 ஆயிரத்தை தர மறுத்து இருக்கிறார். இதன் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த MLAவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் தற்போது மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
Input & Image courtesy: Twitter Source