10 அமாவாசை போனால் அ.தி.மு.க. ஆட்சி: பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி பேச்சு!

10 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் பரபரப்பான தகவலை கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-08 07:54 GMT

10 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் பரபரப்பான தகவலை கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அது மட்டுமின்றி திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டத்தை அறிவித்தது. இதனிடையே கோவையில் நேற்று (டிசம்பர் 7) அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, நாங்கள் பொறுமையாக 6 மாதங்களாக இருந்ததால் எங்களை பிஸ்கோத்து என்று நினைத்து விட்டீர்கள். சிலிர்த்து எழுந்தால் திமுக தாங்காது. அதிமுக எதற்கும் அஞ்சாது என்றார். மேலும், அடுத்து வருகின்ற 10 அமாவாசைக்குள்  அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். அவர்களாகவே வீழ்ந்து கொண்டு சென்றால் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Tamil Samayam


Tags:    

Similar News