என்னுடைய பெயரை மாற்றி கூறுவதா.. மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்.!
தம்முடைய பெயரை மாற்றி பொய் ராதாகிருஷ்ணன் எனக் கூறுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரைகளில் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அது போன்று பிரச்சாரத்தில் ஈடுபடும்போது திமுக தலைவர்கள் மிகவும் அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசி வருகின்றனர்.
கன்னியாகுமரி பரப்புரையின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை பொய்.ராதாகிருஷ்ணன் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு மற்றவர்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில், தம்முடைய பெயரை மாற்றி பொய் ராதாகிருஷ்ணன் எனக் கூறுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்.ராதாகிருஷ்ணன் என்பது தந்தை பெயரின் முதல் இரண்டு எழுத்து என்றும், பொன்னையா நாடார் என்பதன் சுருக்கமாக பொன் எனப் போட்டுக் கொண்டதாகவும் கூறினார்.