"பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

அடுத்த ஆண்டு வரபோகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் 20 வகையிலான தொகுப்புகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2021-11-17 13:01 GMT

அடுத்த ஆண்டு வரபோகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் 20 வகையிலான தொகுப்புகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை, தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Source: Twiter

Image Courtesy:Asianetnews

Tags:    

Similar News