தபால் வாக்குகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் முன்னிலை.!
எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை பெற்று வருகிறார். அதே போன்று மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் முன்னிலையில் உள்ளனர்.
எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை பெற்று வருகிறார். அதே போன்று மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் உள்ளார்.
குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் தங்கமணி முன்னிலையில் உள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.சி.சம்பத் 4,436 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.