'பிரதமர் ஐயா! எங்களுக்கு 6 மருத்துவ கல்லூரி கொடுங்க?' - மோடியிடம் கேட்கும் தி.மு.க அரசு!

தமிழகத்துக்கு புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என பிரதமர் மோடியிடம் தி.மு.க அரசு கேட்டுள்ளது.

Update: 2022-12-27 12:56 GMT

தமிழகத்துக்கு புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என பிரதமர் மோடியிடம் தி.மு.க அரசு கேட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ள 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கூறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, 'தமிழகத்தில் திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு புதிய மருத்துவ கல்லூரிகள் தேவை என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு இந்த ஆண்டு முதல் 13,000 கட்டணம் வசூலிக்கப்படும், ஏற்கனவே பயின்ற மாணவர்களுக்கு 113 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது' என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவக்கி வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது' எனவும் கூறினார்.


Source - Dinamalar 

Similar News