பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த நூல் என்ன தெரியுமா?

Update: 2022-05-26 13:40 GMT

சென்னைக்கு வருகை புரிந்த பிரதமரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தமிழகத்தில் ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (மே 26) மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நூல் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். அந்த நூலின் பெயர் திருவிளையாடல் புராணம் ஆகும். இந்த நூல் சிவபெருமான் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நமது பாரதத்தின் தவப் புதல்வர் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களை, அன்பு மற்றும் கருணையினால் நேரில் வந்த சிவபெருமான் சிறப்பை எடுத்துரைக்கும் #திருவிளையாடல்புராணம் நூலை அளித்து வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News