தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை தமிழகத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி.!
தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை தமிழகத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி.!;
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் வியூகங்களை தமிழக பாஜக வகுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக பாஜக தலைவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் புதிய உறுப்பினர்கள் அதிகளவில் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இதனால் அக்கட்சி மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது. அதே போன்று தேர்தல் பிரச்சாரங்களில் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வருகின்ற 14-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமரின் முதல் நிகழ்ச்சியை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விழாவாக நடைபெறுறகிது. இதில் சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்ற புதிய வகை பீரங்கியை பிரதமர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
மேலும், மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை -அத்திப்பட்டு 4-வது ரயில் பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதனையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
பிரதமர் எப்போதும் தமிழகத்தின் மீது தனிப்பாசம் வைத்துள்ளார். அவர் எங்கு சென்றாலும் முதலில் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கணம் உள்ளிட்டவை மேற்கோள் காட்டி உரையாற்றி வருகிறார். இதனால் அவருக்கு தமிழ் பற்று மிகவும் அதிகமாக உள்ளது அனைவருமே அறிந்த விஷயம். தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்கள் அதிகளவு உள்ளது. இதனை 3 கட்டங்களாக திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான் முதல் நிகழ்ச்சி வருகிற 14ம் தேதி சென்னையில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தது கோவை மற்றும் கன்னியாகுமரியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே 3 கூட்டங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. அப்போது 3 கூட்டங்களும் மிக பிரமாண்ட முறையில் மக்கள் முன்பாக பிரதமர் உரையாற்றுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பிரதமரின் வருகை தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.