மூன்றாவது முறையாக மகுடம் சூடப் போகும் பிரதமர் மோடி- மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக வெற்றி பெற்ற மோடி அரசு!

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராக மகுடம் சூட இருக்கிறார் நரேந்திர மோடி. பாஜக அரசு மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.

Update: 2024-06-04 14:30 GMT

நாடாளுமன்ற பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. 542 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி அடைந்துள்ளது .நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணி 2014 ஆம் ஆண்டும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 மற்றும் 17வது மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது .இந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று இருப்பது பாஜக மீது மக்கள் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

பிரதமர் மோடி இடைவிடாமல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை நிகழ்த்தினார்.எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் சுமார் 40 மணி நேரம் தியானம் செய்தார். மூன்றாவது முறை ஆட்சியின் போது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இத்தகைய சூழ்நிலையில் இன்று காலை 542 மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதான தகவல்கள் வெளியானது.  ஒரு கட்டத்தில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி பின் தங்கும் நிலை ஏற்பட்டாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் நரேந்திர மோடி முந்திவிட்டார். ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் துடைத்தெறியப்பட்டு பாஜகவின் ஆட்சி ஆரம்பம் ஆனது.

திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக  கேரளாவில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மகுடம் சூடப் போகும் நபர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். மோடி அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது நிரூபித்துள்ளது.


SOURCE :NEWS 

Tags:    

Similar News