பிரதமர் மோடியை கொலைகாரன் என பேசிய வன்னியரசின் மேல் காவல்நிலையத்தில் குவியும் புகார்கள் - அதிரடி காட்டும் பா.ஜ.க !
பிரதமர் மோடியை கொலைகாரன் என விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசை கைது செய்ய கோரி வழக்குகள் தமிழகமெங்கும் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தி.மு.க சார்பில் சரவணன், வலதுசாரி நித்தியானந்தம், பத்திரிகையாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு "இன்று இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் வெளியேறிய நாள் எங்களின் புனித நாள்" என நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் பேசினார். மேலும், பிரதமர் மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்ற கொலைகாரன் என வன்னியரசு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க'வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசை கைது செய்யவேண்டும் என பா.ஜ.க'வினர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். அதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன், கொலைகாரன், திருடன் என ஒருமையில் பேசி அவமரியாதை செய்த வன்னியரசை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்து வருகின்றனர். கடநத இரு தினங்கள் முன் பா.ஜ.க'வை சேர்ந்த கல்யாணராமனை நள்ளிரவில் காவல்துறை கைது செய்யது குறிப்பிடதக்கது.