வரலாற்று சிறப்பு மிக்க சரயு தேசிய கால்வாய் திட்டம் - நாட்டுக்கு அற்பணித்த பிரதமர் மோடி !

Update: 2021-12-12 00:30 GMT

"நதிநீரை சரியான முறையில் பயன்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது" என உத்திரபிரதேசத்தில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட வரலாற்று நீர்பாசன திட்டத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அற்பணிக்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.




 


நதி நீர் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்திரபிரதேசத்தில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது, "பா.ஜ.க ஆட்சியின் நேர்மையான நோக்கங்களுக்கும், திறமையான பணிக்கும் சான்றாக உள்ளது. நதிநீரை சரியான முறையில் பயன்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது" என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் சரயு தேசிய கால்வாய் திட்டம் தமது ஆட்சியின்போது தொடங்கப்பட்டதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, "சிலர் பெயருக்கு ரிப்பன் வெட்டி விழா நடத்துவதாகவும், ஆனால் நாங்கள் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை இன்று நாட்டுக்கு அற்பணித்தது பெருமை எனவும் கூறினார்.


Source - Maalai Malar

Tags:    

Similar News