சிறை கைதிகள் மேல் தி.மு.க.வுக்கு அக்கறை உள்ளது: திட்டமிட்டப்படி 700 கைதிகள் விடுவிப்பு? - அமைச்சர் ரகுபதி பேட்டி!

இந்தியாவிலேயே ஐடிஐ தொழிற்பயிற்சி இரண்டு சிறைச்சாலைகளில் மட்டுமே உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மற்றொன்று தமிழ்நாடு திருச்சியில் உள்ளது. சிறைக்கைதிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை உள்ள அரசாக திமுக இருக்கிறது.

Update: 2021-10-17 09:10 GMT

திருச்சி மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

திருச்சி சிறையில் தண்டனை பெற்ற சிறைவாசிகள் சுமார் 1,517 பேர் உள்ளனர். இந்தியாவிலேயே ஐடிஐ தொழிற்பயிற்சி இரண்டு சிறைச்சாலைகளில் மட்டுமே உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மற்றொன்று தமிழ்நாடு திருச்சியில் உள்ளது. சிறைக்கைதிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை உள்ள அரசாக திமுக இருக்கிறது.

மேலும், 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதில் எவ்வித சிக்கலும் இல்லை. குறிப்பிட்டப்படி விடுவிக்கப்படுவர். இதற்கான பட்டிலை தயார் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dailythanthi


Tags:    

Similar News