மதுவிலக்கா? அப்டின்னா என்ன? நாங்க யாரும் சொல்லலையே! - தமிழக மக்கள் தலையில் மண் அள்ளி போட்ட திமுக
'திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவம் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை';
'திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவம் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை' திமுக எம்.பி கனிமொழி கூறிய விவகாரம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்றது. திமுகவின் தேர்தல் பரப்புரைகளில் முக்கியமான பரப்புரையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற பரப்புரையை இன்னும் திமுக நிறைவேற்ற வில்லை.
அது பற்றி அறிவிப்போ, அறிக்கைகளோ ஏதும் திமுக தரப்பில் இதுவரை இல்லை! இந்த நிலையில் தற்போது கனிமொழி அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என நாங்கள் சொல்லவில்லை என கூறி பல்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தேர்தல் பரப்புரையின் போது திமுகவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி குடும்பத்தினரான அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மற்றும் கனிமொழி ஆகிய மூவரும் மதுவிலக்கை பற்றி பேசி உள்ளனர்.
குறிப்பாக இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என உறுதி அளிக்கிறோம் மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு கையெழுத்து இருக்கும் எனவும் தேர்தல் பரப்புரையில் கூறி கைத்தட்டு மட்டுமல்ல ஒட்டு கூட வாங்கினார்
அடுத்தபடியாக திமுகவின் பட்டத்தை இளவரசர் உதயநிதி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு கண்டமனூர், பிச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேலும் நாங்க எப்போ மதுவிலக்கு பத்தி சொன்னோம் நாங்கள் சொல்லவே இல்லையே என கேட்கும் கனிமொழி கூட கனிமொழி கூட அப்பொழுது 'இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது காரணம் குடிப்பழக்கம்' அப்டின்னு தமிழக பெண்கள் மீது ரொம்ப அக்கறையில பேசினாருங்க!