சர்ச்சைக்குள்ளான காளி படத்தை திரைப்பட விழாவிலிருந்து நீக்க வேண்டும் - நடவடிக்கையில் இறங்கிய கனடா நாட்டின் இந்திய தூதரகம்
சர்ச்சைக்குள்ளான காளி படத்தின் போஸ்டரை நீக்க எதிர்ப்புகள் அதிகமாகி வருகின்றன.
சர்ச்சைக்குள்ளான காளி படத்தின் போஸ்டரை நீக்க எதிர்ப்புகள் அதிகமாகி வருகின்றன.
மதுரை சேர்ந்த கவிஞரும், இயக்குனருமான லீலா மணிமேகலை ஆவண படங்களை தயாரித்துள்ளார். கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின் கலை படித்து வரும் அவர் காளி என்ற ஆவண படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார், அதில் இந்து தெய்வமான காளி புகை பிடிப்பது போலவும் பின்னணிகள் தன்பால் ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியை ஏந்தி இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து தெய்வமான காளையை அவமதித்ததாக லீலா மணிமேகலை மீது உத்திரபிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் லீலா மணிமேகலை கூறியுள்ளதாவது, 'இழப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதை பேசும் குரலாக இருந்து விட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்' என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்து கடவுளை அவதாரம் பற்றியதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய போஸ்டர் வெளியிட்ட அனைத்து ஆவணங்களையும் திரைப்பட விழாவிலிருந்து நீக்க வேண்டும் என கனடா அரசுக்கும், திரைப்பட விழா குழுவினருக்கும் இந்திய தூதரகம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.