கட்சிக்குள் பி.டி.ஆர் ஏற்படுத்தும் தலைவலி - முதல்வர் ஸ்டாலினிடம் சென்ற மூத்த அமைச்சர்களின் புகார்

மதுரையில் தி.மு.க அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் யுத்தம் எழுந்துள்ளது.

Update: 2022-11-24 05:57 GMT

மதுரையில் தி.மு.க அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் யுத்தம் எழுந்துள்ளது.

மதுரை நகர செயலாளர்கள் பதவி தளபதி எம்.எல்.ஏ'வுக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதாக கூறி தி.மு.க'வில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது, இதன் தொடர்ச்சியாக மதுரையில் கட்சியினருக்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில், 'செய்நன்றி மறந்தவர்களுக்கு விரைவில் வீழ்ச்சி வரும்' என அமைச்சர் தியாகராஜன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக கட்சி தலைமை தலையிட்டு சுமூகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே மதுரையில் நிதி அமைச்சர் துடுக்குத்தனமான பேச்சு நிற்கவில்லை. சமீபத்தில் மதுரை கூட்டுறவு வாழ விழாவில் கூட்டுறவுத்துறையில் கடத்தல் போன்ற செயல்பாடுகள் திருப்தி இல்லை என மூத்த அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக நிதியமைச்சர் கொளுத்தி போட்டார் பி.டி.ஆர்.

அடுத்த நாளே அமைச்சரின் மத்திய தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர், வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 'கட்சியே குப்பையாக கிடக்குது' என அமைச்சர் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்தார். இது போன்ற அவரது விமர்சனங்கள் நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் நடந்த மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டத்தை 11 தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்து விமர்சித்ததை காரணம் காட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட செயலாளர்கள் உத்தரவால் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

இதற்கு பதிலடியாக மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய நகர் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரான மேயர் இந்திராணி, பகுதி செயலாளர் போன்ற சிலர் புறக்கணித்தனர். இதனால் மீண்டும் மதுரை தி.மு.க'வில் ஈகோ யுத்தம் வெடிக்க துவங்கியுள்ளது.

இது குறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது, 'கட்சியை வைத்து தான் அமைச்சர், மாவட்டச் செயலாளர், மூத்த நிர்வாகிகள் எல்லாம். எல்லாரையும் புறக்கணிப்பதிலேயே அமைச்சர் குறியாக உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி நவம்பர் 29'ல் நடக்கிறது.

இத தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிலரை பங்கேற்க விடாமல் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. தலைமை விரைவில் முடிவு எடுக்கும்' என்ற நம்பிக்கையில் உள்ளோம் என கூறினார்.

கட்சி மூத்த நிர்வாகிகளை அமைச்சர் தியாகராஜன் அடிக்கடி விமர்சனம் செய்ததால் கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளதாகவும், பல மூத்த அமைச்சர்கள் துறை சார்ந்த ஏராளமான கோப்புகள் நிதித்துறையில் கிடப்பில் உள்ளதால் முதல்வர் ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர்கள் புகார் தெரிவித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Source - Dinamalar

Similar News