ஜி.எஸ்.டி. உறுப்பினர்! மத்திய நிதியமைச்சரிடம் பூங்கொத்து கொடுத்து நேரில் வாழ்த்து பெற்ற தியாகராஜன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் நேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார். இது பற்றிய புகைப்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் நிதித்துறை ரீதியான இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான ரூ.65 கோடி மதிப்பிலான சிகரம் அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்.
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் சந்தித்து பூங்கொத்து கொடுது வாழ்த்து பெற்றார். சமீபத்ததில் ஜிஎஸ்டி சீர்த்திருத்த கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜனை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு அவர் ட்விட்டர் மூலம் ஏற்கனவே நன்றியை தெரிவித்த நிலையில் தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Minnambalam
Image Courtesy: Twiter