புதுச்சேரி வரட்டும் ஒருகை பார்க்கிறோம் - ஆண்டிமுத்து ராசா படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தை நடத்திய புதுச்சேரி அ.தி.மு.க
புதுச்சேரியில் ஆண்டிமுத்து ராசா உருவ படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் ஆண்டிமுத்து ராசா உருவ படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி ஆண்டிமுத்து ராசா 'இந்துக்கள் அனைவரும் விபச்சாரின் மகன்கள்' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தற்பொழுது போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க'வினர் ஆண்டிமுத்து ராசாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிரே மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்றுகூடி ராசாவின் படத்தை கிழித்தும் செருப்பால் எடுத்தும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
மேலும் இறுதியாக பேசிய அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறியதாவது, 'இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரியவர்கள் பேசிய ஆண்டிமுத்து ராசா எப்போது புதுச்சேரி வந்தாலும் எப்போது தகுந்த பதிலடி இருக்கும்' என எச்சரித்துள்ளனர்.