புதுச்சேரி தே.மு.தி.க. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது. இதற்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 2ம் கட்டமாக 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக அக்கட்சி தயாராகி வருகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுவதற்கு நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.