கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மீண்டும் வலை விரிக்கும் காங்கிரஸ்

குஜராத் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்குவதாக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்டார்.

Update: 2022-09-07 03:05 GMT

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதை ஒட்டி மாநிலத்தின் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடக்கிவிட்டு உள்ளது. அந்த வகையில் அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பல்வேறு கவர்ச்சிகரமான பகுதியில் மக்களுக்கு உரையாற்றினார். விளம்பர அறிவிப்பாக பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டா? யோசிக்க வேண்டிய ஒரு விஷயமாக தான் இருக்கின்றது.


குறிப்பாக அவர் மக்களுக்கு ஏராளமான விளம்பர வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் வரை பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பொதுமக்களுக்கு முன்னுரிமை 300 யூனிட் வரை இலவச மின்சாரம், கேஸ் சிலிண்டர் விலை 500 ஆக குறைப்பு ஆகிய வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி வெளியிட்டார்.


தற்போது இருக்கும் சூழலில் 500 ரூபாய்க்கு எப்படி சிலிண்டர் வழங்க முடியும்? என்ற கேள்வியை பல்வேறு தரப்பு மக்களும் கேட்டு வருகிறார்கள். இதைத் தவிர பத்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், 3 ஆயிரம் ஆங்கில வழி பள்ளிகள், பெண்களுக்கு இலவச கல்வி போன்றவற்றை பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். கூட்டத்தில் அவர் கூறுகையில், ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News