காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க ராகுல் காந்தியே போதும் - வேலூர் இப்ராஹிம் பளீர்

'தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர் வீட்டில் அனைவரும் வாரிசுகளை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர்' என பா.ஜ.க சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-06 06:18 GMT

'தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர் வீட்டில் அனைவரும் வாரிசுகளை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர்' என பா.ஜ.க சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற வேலூர் இப்ராஹிம் பேசியதாவது, 'தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இஸ்லாமிய தலைவர் தலைமையில்தான் விநாயகர் ஊர்வலம் நடந்தது அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது விநாயகர் ஊர்வலத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்' என்றார்.


'திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியசாமி அமைச்சராக உள்ளார் அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ'வாக உள்ளார் அடுத்து பேரன் தயாராகி உள்ளார். முதல்வர் போன்று தங்கள் வாரிசுகளை வளர்ப்பதில் அமைச்சர்களும் கவனமாக உள்ளனர் பா.ஜ.க'வை பொறுத்தவரை சாமானியனும் நிர்வாகத்திற்கு வருவார்.


காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க கூறியது தற்போது அந்த வேலையை ராகுல் கச்சிதமாக செய்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரில் நடத்தப்படும் நடை பயணத்தின் போது காங்கிரஸ் கூடாரமே யாருமே இல்லாமல் காலியாகிவிடும் என அக்கட்சியினரே கூறுகின்றனர்' என்றார் அவர்.


Source - Dinamalar

Similar News