ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.பி பிரத்யா தாகூர் விமர்சனம்?

ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறது அதற்கான காரணம் என்ன?

Update: 2023-03-13 00:37 GMT

ராகுல் காந்தி தன்னுடைய பிரிட்டன் பயணத்தின் போது அங்கு நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் சிறிது கூட யோசிக்காமல் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் வகையில் இந்தியாவைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். எனவே இதன் காரணமாக பல்வேறு நாட்களாக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் சொன்ன கருத்துக்கள் இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்சித் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் அவருடைய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். எனவே ராகுல் காந்திக்கு அரசியல் வாய்ப்பளிக்காமல் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி அவர்கள் தற்போது பதிவிட்டு இருக்கிறார்.


காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேசும் பொழுது மைக்குகள் அணைக்கப்படுவதாக இந்தியாவைப் பற்றி அவர் அங்கு குற்றம் சாட்டுகிறார். ராகுல் காந்தியின் காலத்திற்கு பா.ஜ.கவினர் தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தி பேச்சை பற்றி பா.ஜ.க எம்.பி பிரத்யா தாகூர் கடுமையாக விமர்சித்து தற்போது அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக நாடாளுமன்றம் சீராக நடைபெற்றால் தான் பல பணிகளை நம்மால் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி தற்போது அழிவின் எல்லையில் இருக்கிறது.


அவர்களது சிந்தனைகளும் தற்பொழுது சிதைக்கப்பட்டு விட்டது. நம் நாட்டில் உள்ள மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தற்போது அந்த மக்களை அவமதிக்கிறார். நாடாளு மன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறுவது மிகவும் வெட்கக்கேடானது. அவர் அரசியலுக்கு பொருத்தமான நபராக இருப்பாரா? என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News