ராகுல் காந்தியின் கீழ்த்தரமான அரசியலுக்கு, தக்க பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரதுறை அமைசசர்!

இந்தியாவில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து சாடி வருகிறார். ராகுல் காந்தியின் பதிவுக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2021-08-02 12:13 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதமாக, கொரோனா தடுப்பூசி திகழ்ந்து வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மற்றும் கோவிட்ஷில்டு தடுப்பூசிகளை இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் இந்தியாவில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து சாடி வருகிறார்.


இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் " ஜூலை மாதமும் கடந்து விட்டது, ஆனால் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் போக வில்லை. #WhereAreVaccines " என்ற ஹேஷ்டாக் போட்டு அவர் பதிவிட்டு இருந்தார். ராகுல் காந்தியின் பதிவுக்கு மத்திய  சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


இது குறித்து மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்ட  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த மாதம் அது மேலும் வேகப்படுத்த படும். இந்த சாதனைக்காக நமது சுகாதாரப்பணியாளர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். தற்போது நீங்களும் (ராகுல்காந்தி) அவர்களுக்காகவும், நமது நாட்டிற்காகவும் பெருமைப்பட வேண்டும்" என்று அமைச்சர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Source:Daily Thanthi

Image Courtesy: Zee News

Tags:    

Similar News