"பீகார் தேர்தல்களின் போது சிம்லாவில்  ராகுல், பிரியங்கா பிக்னிக்"- கூட்டணிக் கட்சி ஆதங்கம்.!

"பீகார் தேர்தல்களின் போது சிம்லாவில்  ராகுல், பிரியங்கா பிக்னிக்"- கூட்டணிக் கட்சி ஆதங்கம்.!

Update: 2020-11-16 18:46 GMT

சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா-ஐக்கிய ஜனதா தள கூட்டணி நான்காவது முறையாக ஆட்சி அமைத்தது. இதற்கு முக்கியமான காரணமாக, எதிர்க்கட்சி கூட்டணியான மகாகத்பந்தன் (MGB) உடன் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளை போல் வெற்றி பெறத் தவறியதே காரணம் என்று கருதப்படுகிறது.

\70 இடங்களை கேட்டு வாங்கிய காங்கிரஸ், அதில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணியின் வெற்றி இடங்களை கீழே இழுத்துச் சென்றது. அதன் தோல்விக்குக் காரணங்களை ஆராய நடந்த பாட்னா கூட்டத்தில், யார் சட்டமன்ற தலைவராவது என்ற போட்டியில் 2 எம்எல்ஏக்கள் அடித்துக்கொண்டனர்.

 இதையெல்லாம் பார்த்து அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள் இன் ஒரு தலைவர் சிவானந்த திவாரி, மகாகத்பந்தன் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைமையான காந்தி குடும்பத்தையும் சாடியிருக்கிறார். 

 பீகார் தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தபொழுது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சிம்லாவில் விடுமுறையில் இருந்ததாகவும் இதுதான் கட்சி நடக்கும் முறையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அளித்துள்ள கருத்துக்களையும் அறிவுரைகளையும் மீறி காங்கிரஸ் கட்சி தங்கள் அணுகுமுறையில் மிகவும் பொறுப்பற்று நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.

ANI செய்திகளுக்கு திவாரி அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. கலந்து கொண்டவர்களில் கபில் சிபல், சசிதரூர் கூட அடக்கம். அவர்கள் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்ளும் விதத்தைக் குறித்து கவலை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் காங்கிரசிற்கு விசுவாசமாக இருந்தனர். இது கட்சியை நடத்தும் ஒரு வழி அல்ல.

இங்கே தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தபொழுது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் வீட்டில் சிம்லாவில் விடுமுறையை கழித்து கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சி நடந்து கொள்வதைப் பார்த்தால் அவர்கள் பாரதிய ஜனதாவிற்கு உதவி செய்வதைப் போல் இருக்கிறது. 70 இடங்களை வலுக்கட்டாயமாக பெற்றனர் ஆனால் 70 பேரணிகளை கூட நடத்தவில்லை. ராகுல் காந்தி மூன்று நாட்கள் பீகாருக்கு வந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பேரணிகளை தான் நடத்தினார். பிரதமர், ராகுல் காந்தியை விட மிகவும் வயதில் மூத்தவர்.

ஆனால் அவரை விட விட அதிக பேரணிகளை நடத்தினார். பிரியங்கா காந்தி வரவே இல்லை. அவர்கள் தங்கள் எதிராளிகளிமிருந்து பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். பாஜக 74 இடங்களை வென்று இருந்தாலும் நாற்பத்தி ஒரு இடங்களை வென்ற ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதீஷ் குமாரை முதல்வர் ஆக்குகிறார்கள். ஜித்தன் ராம் மஞ்சி போன்ற தலைவர்கள் மகாகத்பந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் பா.ஜ.க அவர்களை ஏற்றுக்கொண்டு 12 இடங்களை கொடுத்து கொடுத்தது. வெறும் அதிக இடங்களை பெறுவதில் மட்டும் கௌரவம் இல்லை. அதில் வெற்றி பெறுவதுதான் கௌரவம் இருக்கிறது" என்று காங்கிரசை விளாசித் தள்ளினார். 

உத்திரபிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், "சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 70 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது என்பது முக்கியமில்லை, தங்களுடைய கூட்டணி கட்சிகளை விட குறைவான இடங்களில் போட்டியிட்டால் அவர்களுடைய கௌரவத்திற்கு எந்த குறைகளும் வந்துவிடாது.

உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள் இடைத்தேர்தல்களில் நான்கு இடங்களில் அவர்கள் டெபாசிட்டை இழந்து விட்டார்கள். ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களிலும் குலாம்நபி ஆசாத்திற்கு வேண்டியவர்களுக்கு அவர்கள் சீட்டுகளை கொடுக்கவில்லை". காங்கிரஸ் ஒரு ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரத்தின் நடத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

 இந்தியாவின் மிக மூத்த கட்சியான காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சுமையாக மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடங்கி உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வரை காங்கிரஸ் சீட்டுகளை வெற்றிபெற தவறிவிட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் ஆர்ஜேடி 75 சீட்டுகளை வெற்றி பெற்றது பா.ஜ.க 74 வெற்றி பெற்றது ஆனால் அக்கூட்டணியில் இருந்தது காங்கிரஸ் என்பதால் அதில் வெற்றி பெற்ற இடங்கள் 110 உடன் நின்று விட்டது. இதன் காரணமாக நிதிஷ்குமார் மற்றுமொரு ஐந்து வருடத்திற்கு முதலமைச்சராக போகிறார்.

 வருகின்ற தகவல்களின்படி பீகார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்தபொழுது ராகுல் காந்தியும் பிரியங்காவையும் சிம்லாவில் தங்கள் விடுமுறையை கழித்து வந்தனர்.

Similar News