விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனாவில் அவதியுறும் நிலையில் ரெய்டு நடத்தலாமா! தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது பற்றி தகவல் கேள்விப்பட்டதும் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான பாபு முருகவேல், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் தொண்டர்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிற்கு வருகை புரிந்தனர்.

அப்போது அங்கு காவலுக்கு இருந்த போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆதிராஜாராம் போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாபு முருகவேல், அதிமுக தொண்டர்கள் பொன்விழா கொண்டாடி எழுச்சி பெற்று வரும் சமயத்தில் பொய்யான சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. மேலும் இதனை சட்டப்படி சந்திப்போம். முன்னாள் அமைச்சர் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் வீட்டில் மனிதநேயமற்ற முறையில் சோதனை நடத்தி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், திமுக ஆட்சி முறையற்ற முறையில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டு வைத்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். மேலும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக மட்டுமே எனக் குறிப்பிட்டார்.
Source, Image Courtesy: Etv Bharath