ராஜராஜன் சோழன் இந்துவே கிடையாது - களத்தில் குதித்த தி.மு.க

ராஜராஜன் சோழ மன்னனாக இருந்த போது இந்து மதம் என ஒரு மதம் இல்லவே இல்லை சைவம் மற்றும் வைணவம் மட்டும் தான் இருந்தது என திமுக செய்தி தொடர்பளார் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Update: 2022-10-06 11:38 GMT

ராஜராஜன் சோழ மன்னனாக இருந்த போது இந்து மதம் என ஒரு மதம் இல்லவே இல்லை சைவம் மற்றும் வைணவம் மட்டும் தான் இருந்தது என திமுக செய்தி தொடர்பளார் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

'ராஜராஜசோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என இல்லவே இல்லை எனவும், ராஜராஜ சோழன் தமிழ் மன்னன் தென்னாடுடைய சிவனே போற்றி எனவும் கூறுவார்கள்' என டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் வந்தது முதலில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜன் இந்து மன்னன் இல்லை என கூறியது தற்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க'வின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது, 'ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போதும் இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை சைவம், வைணவம் என கூறுவார்கள். வைணவ, சைவ போராட்டம் என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ராஜ ராஜ சோழன் சைவ மன்னன் தான் என கூறுவார்கள்' என தி.மு.க செய்தி தொடர்பாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Asianet News 

Similar News