மாநிலங்களவைத் தேர்தல் - கர்நாடகாவில் வெற்றி பெற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Update: 2022-06-11 04:56 GMT

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் மொத்தம் 57 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். இதனிடையே மீதம் உள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

Full View

அதே போன்று கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெஹர் சிங் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கினர். அதன்படி இத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜக்கேஷ், லெஹர் சிங் உள்ளிட்ட மூன்று பேரும் வெற்றி பெற்றனர். மேலும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இது குறித்து மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தனது முகநூல் பதிவில் பதிவிட்டிருப்பதாவது: திருமதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் வெற்றிகரான அமைச்சராக இந்தியாவை உலகத் தலைவராக மாற்றுவதற்கான உங்களின் முயற்சிகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News