தமிழக அரசை மீண்டும் பாராட்டிய ராமதாஸ்.. கூட்டணியில் தொடர்வதற்கு அச்சானியா இது.?
தமிழக அரசை மீண்டும் பாராட்டிய ராமதாஸ்.. கூட்டணியில் தொடர்வதற்கு அச்சானியா இது.?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிழப்புகளும் குறைந்தது, தொற்று பாதிப்புகளும் வெகுவாக குறைந்தது.
அதில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து முன்னெச்சரிக்கையும் துரிதமாக எடுத்ததால் கொரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது.
அவரது முயற்சிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா பரவல் 1000க்கும் கீழ் குறைந்த பின்பும் தினம் 65 ஆயிரம் பேருக்கும் கூடுதலாக பரிசோதனை நடத்தப்படுவது மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மேலும், தினசரி பாதிப்பைவிட 10 மடங்கு கூடுதலாக சோதனை செய்தால் போதும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நிலையில், அதை விட இது பலமடங்கு அதிகம். சுகாதாரத்துறைக்கு பாராட்டுகள். என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தமிழக அரசை பாராட்டி வருகிறார் என்றால் மீண்டும் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. இந்த மாதம் இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரலாம்.