தீபாவளி திருநாளில் இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவட்டும்: ராமதாஸ் வாழ்த்து செய்தி!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் ஒரு சமூக விலங்கு, மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.
தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகம் இப்போது தான் அந்தக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்கள் மகிழ்ச்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மக்களின் மகிழ்ச்சிக்கு வளர்ச்சி அவசியம். மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், சமூகநீதியை முடக்கி வைத்து விட்டு வளர்ச்சியையும் அடைய முடியாது; மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது. கிரகணத்தில் ஒளியை மறைக்கும் நிழல் போன்று, இப்போது தமிழகத்தில் சமூகநீதி கிரகணம் நடந்து கொண்டிருக்கிறது. ஒளி மட்டுமே நிலையானது; கிரகணங்கள் தற்காலிகமானவை. விரைவில் கிரகணம் மறையும்.. சமூகநீதி ஒளி பரவும். அந்த ஒளி அனைவருக்கும் நலனும், பயனும் அளிக்கும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி ஒளியால் நல்லின்பம் மட்டுமின்றி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட நல்லவை அனைத்தும் மத்தாப்பின் வண்ணங்களாய் நிறைய தீபஒளித் திருநாள் வகை செய்ய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter