தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க தயார்.. ஆனால் இதை செய்யனும்.. கே.பி.முனுசாமி.!

தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க தயார்.. ஆனால் இதை செய்யனும்.. கே.பி.முனுசாமி.!

Update: 2021-01-31 18:46 GMT

டிடிவி தினகரன் தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தால், அதிமுகவில் சேர்ப்து குறித்து தலைமை பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பரபரப்பான தகவலை கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அப்போது சசிகலா மருத்துவமனையை விட்டு செல்லும்போது அவருடைய காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டவிரோதமானது ஆகும் எனக்கூறினார்.

இந்நிலையில், கொடி விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்காக சொல்லி வருகின்றனர். கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்வேறு வகைகளில் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தினகரன் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் தினகரன் என்று பேசினார்.

மேலும், அதிமுக -அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, “அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்புக் கடிதம் அளித்தால் அது குறித்து தலைமை பரிசீலனை செய்யும் என்று கூறினார். தற்போது கே.பி.முனுசாமியின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக அதிமுக, அமமுக இணைப்பு உறுதியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கான விடை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Similar News